Skip to main content

பிக் பாஸ் தர்ஷனின் காதலி கேட்ட கேள்வியால் அதிர்ச்சியான பிக் பாஸ்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். 
 

sanam shetty



தற்போது பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இந்த நிலையில், நாடகம் மற்றும் சினிமா துறையில் எழுத்தாளராக இருக்கும் பத்மாவதி சேரன் ஒரு நல்ல தந்தை என்றும் அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறார் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் மிக கடுமையானதாக மாறியுள்ளது. அதில் நாமினேஷன் செய்யும் போது மிளகாய் சாப்பிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு  பிக் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷனின் காதலி சனம் செட்டி மிகவும் கோபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பிக் பாஸ்ஸில் மிளகாய் சாப்பிட வைத்தது தர்சனின் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்