Skip to main content

தருமபுரி மாணவி உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு!!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

 

Dharmapuri student body post mortem test Body delivery

 

கடந்த 6ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ்  என்ற இரண்டு அயோக்கியர்கள் சவுமியாவை பாலியல் கொடுமை செய்துள்ளனர். தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

 

மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர்.  காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்.  ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

 

இரண்டு தினங்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவை தரும்புரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்தார். 

 

 

உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யும் வரை சடலத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போராடினர்.

 

இந்த பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ் சரணடைந்த நிலையில். உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை தொடங்கிய நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல்  தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.