
புதுக்கோட்டைக்கு தமிழக ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யபட்டு கோவில்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்ட குண்டாண்டார்கோவில் திமுக ஒன்றிய செயலாளார் வெங்கடாசலத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல மேலும் பலர் மயக்கமடைந்துள்ளனர். மண்டபங்களில் தண்ணீர் இல்லாததால் மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள திமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை விடுதலை செய்யக் கோரி திருக்கோகர்ணத்தில் திமுகவினரும் ஆலங்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் சிபிஐ, சிபிஎம் திமுகவினரும் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே பல ஊர்களிலும் போராட்டங்கள் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.