Skip to main content

நாதியற்று போனதால் விரக்தி! வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை!!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
ர்

 

தாரமங்கலம் அருகே, வயது முதிர்வாலும், பராமரிக்க ஆள்கள் இல்லாததாலும் ஏற்பட்ட விரக்தியில் முதிய வயது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னகாடாம்பட்டியை சேர்ந்தவர் முத்துகவுண்டர் (90). இவருடைய மனைவி நல்லம்மாள் (80). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


மூத்த மகன் ராஜா. வெளியூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகன் நாகராஜ், சின்னகாடாம்பட்டியிலேயே குடும்பத்துடன் தனியாக வசிக்கிறார். 


இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு, அவரவர் குடும்பத்துடன் பெற்றோரை விட்டுவிட்டு தனித்தனியாகச் சென்றுவிட்டதால் அவர்களைக் கவனிக்க ஆள்களின்றி தவித்து வந்தனர். 


தள்ளாத வயதில், அந்த தம்பதியினர் மருந்து, மாத்திரை என நாள்களை நகர்த்தி வந்தனர். இந்நிலையில், வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்த கணவனும், மனைவியும் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கவனிக்க ஆள் இல்லாததால், தள்ளாத வயதில் தடுமாறி வந்த முதிய வயது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை; சோதனை ஓட்டம் முடிந்தது

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

ranipet sholingur Rope car project

 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. தமிழ்நாடு மட்டும்மல்லாமல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். மலை உச்சியில் அமைந்துள்ள நரசிம்மர் கோவிலுக்கு செல்ல சுமார் ஆயிரம் படிக்கட்டுகள் ஏறி மேலே செல்ல வேண்டும். இதனால் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் என்கிற கம்பிவட ஊர்தி அமைக்கப்பட வேண்டும் என்பது இக்கோவில்  பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கை.

 

ரோப் கார் திட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முடியாமல் தொய்வாகவே இருந்து வந்தது. 2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு கவனம் எடுத்தார். மீண்டும் பணிகள் தொடங்கியது, வேகவேகமாக பணிகள் நடைபெற்றன.

 

ranipet sholingur Rope car project

 

இந்நிலையில் ஏப்ரல் 14(இன்று) ஆம் தேதி கம்பிவட ஊர்தி பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டு மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு சென்று வந்தனர்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விரைவில் இந்த திட்டத்தை பொதுமக்கள் பயணம் செய்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார் என்றார். பக்தர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 

Next Story

கோவையில் வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

 

கோவையில் இந்தியன் வங்கி முன்பு  விஷம் குடித்து விவசாயி பூபதி தற்கொலை செய்துகொண்டார்.

 

s

 


சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த  விவசாயி பூபதி, தனது நண்பர்களுடன் இணைந்து பால்பண்னை தொடங்குவதற்காக இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளார்.  அடமான பத்திரங்களை வைத்தே இந்த கடன் பெறப்பட்டுள்ளது.   பால் பண்ணை லாபகரமாக இயங்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.   இந்த நிலையில் வங்கியில் வைத்த பத்திரத்தை மீட்பதற்காக சென்றார் பூபதி.   கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரம் தரப்படும் என்று வங்கி கூறியபோது,   தனது பங்கு கடனை மட்டும் எப்படியாவது செலுத்திவிடுகிறேன் என்று கூறி பத்திரத்தை கேட்டிருக்கிறார் பூபதி.  இதனால் பூபதிக்கும் வங்கி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.   

 

 3 பேரும் கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரத்தை தர முடியும் என்று வங்கி  மேலாளர் உறுதியாக சொல்லிவிட்டதால் விரக்தியில் விவசாயி பூபதி வங்கி முன்பு பூச்சிமருந்து  குடித்து தற்கொலை செய்துகொண்டார்.