டெங்கு காய்ச்சல் வேகமாக வேலூர் மாவட்டத்தில் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் தோல்வியை சந்தித்துள்ளது வேலூர் மாவட்டம். இதனால் அடுத்தடுத்து டெங்கு மரணங்கள் நிகழ துவங்கியுள்ளன.

வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா பகுதியை சேர்ந்த நட்சத்திரா என்கிற 4 வயது சிறுமி இறந்த நிலையில், அக்டோபர் 22ந்தேதி குடியாத்தம் ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்கிற 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது சகோதரி அதே டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெள்ளநாயக்கன் ஏரி கிராமத்தை சேர்ந்த கிரண்குமார் எனகிற 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் விடியற்காலை இறந்துள்ளான்.
இப்படி அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் இறந்துவருவது வேலூர் மாவட்ட தாய்மார்களை அதிர்ச்சியடைய வைத்து பயத்தை ஏற்படுத்தியுள்ளது.