மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.10 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டத்தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன என்றார்.
இதைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தல் நூற்றுக்கு நூறு சதவீதம் எந்த வித முறைகேடுகளும் இன்றி நேர்மையாக நடத்தப்பட்டது. அது மட்டும் இல்லாமல் திமுக அளித்த புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது. விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை தாங்கள் ஏற்க முடியாது. வாக்காளர் பட்டியலை நாங்கள் தயாரிக்கவில்லை என்று கூறிய அவர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பார்கள் என்று தெரிவித்தார்.