வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இறந்தவரின் உடல் பாலத்திலிருந்து கயிறு கட்டி கீழே இறக்கப்பட்டு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவலம் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்திருந்த நிலையில், இதுதொடர்பான விடீயோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் வேலூர் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் குடியிருப்பில் இருந்து மயானத்துக்கு செல்வதற்கு பாலத்தில் இருந்து உடலை கயிறு கட்டி கீழே இறக்கி மயானத்திற்கு கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் அண்மையில் வெளியாகியிருந்தது. வேலூரில் பட்டியலின சமுதாயத்தை சேந்தவரின் உடலை குறிப்பிட்ட வழியில் எடுத்துச்சொல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி உடல் கீழே இறக்கப்பட்டு மயானத்துக்கு எடுத்து சொல்லப்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகை செய்தியின் அடிப்படையில் மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
.