Published on 02/06/2024 | Edited on 02/06/2024
சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02-06-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.