Skip to main content

விழாவின்றி எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்க நீதிமன்றம் அனுமதி!!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
Court permits to open MGR centenary curve without ceremony

 

சென்னை  காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவை திறப்புவிழா இன்றி திறந்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பான வழக்கில் இன்று நடந்த விசாரணையில், எம்ஜிஆரின் புகழை பறைசாற்ற நினைவு வளைவை தவிர தமிழக அரசு என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் எம்ஜிஆரின் கொள்கை மற்றும் கருத்துக்களை பரப்ப தமிழக அரசு என்ன செய்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியது.

 

 

வரும் ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு வளைவை திறக்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில் எந்தவொரு திறப்பு விழாவுமின்றி நினைவு வளைவை திறக்க அனுமதியளித்துள்ளது உயர்நீதிமன்றம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; அதிமுக வழக்கு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
counterfeiting liquor; AIADMK case

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

counterfeiting liquor; AIADMK case

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல்கள் தகனம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

Next Story

'இளையராஜா உரிமை கோர முடியாது'-எக்கோ நிறுவனம் வாதம்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
'Ilayaraja cannot claim'-Echo company's argument

இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷாபிக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் பாடல்களின் முதல் காப்புரிமை உரிமையாளர்கள். மேலும் பதிப்புரிமை தொடர்பாக பட தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து 4500 பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கியுள்ளது. இளையராஜா உடன் தாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் 1990 ஆம் ஆண்டு வரை இளையராஜாவுக்கு ராயல்டி வழங்கி வந்ததாகவும் அதன்பின் நிறுத்திவிட்டதாகவும் வாதங்களை வைத்தார்.

இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ இசையமைப்பாளருக்கு தார்மீக உரிமை வரும். சமீபத்தில் தன்னுடைய பாடல் திரிக்கப்பட்டதாக 'மஞ்சள் மல்' பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என எக்கோ நிறுவன வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அப்பொழுது இளையராஜாவை கௌரவப்படுத்தியதாக 'மஞ்சள் மல்' இயக்குநரும் தயாரிப்பாளரும் கூறியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிப்புரிமை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளருக்கு தன்னுடைய உரிமை வழங்கி விட்டார். உரிமை வைத்திருக்க விரும்பினால் ஒப்பந்தம் செய்ய வேண்டும். எந்த ஒப்பந்தமும் செய்யாத நிலையில் இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ தரப்பு வாதங்களை வைத்தது. எக்கோ நிறுவன தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இளையராஜாவின் தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.