Skip to main content

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு இடம் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

highcourt

 

 

 

சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் "சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் ஊழல், லஞ்சம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய லஞ்ச ஒழிப்பு பிரிவு தன் கடமையில் இருந்து தவறி விட்டது. எனவே தற்போது சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்வதாக உத்தரவிட்டார் . அதே வேலையில் டிஜிபியிடம் கலந்து ஆலோசித்து லஞ்ச ஒழிப்பு துறையின் நேர்மையான அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்

 

 

இந்த சிறப்பு லஞ்ச ஒழிப்பு குழுவை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் .லஞ்ச ஒழிப்பு புகார்களை பெற தனி கவுண்டர் சென்னை மாநகராட்சியில் ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைக்க வேண்டும். அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் இதுதொடர்பாக உரிய விளம்பரப்படுத்த வேண்டும்.மாநாகராட்சி அலுவலகங்களில் சிசிடிவி கேம்ரமாக்கள் வைக்க வேண்டும்.ரகசிய குழு அமைத்து மாநகராட்சி அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்.

 

 

 

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும் அவற்றை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதலாக ஒப்பீட்டு முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்தாக இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது கட்டப்பட்டு வரும் கட்டிட்டங்கள் நேரில் ஆய்வு செய்து அதில் சட்ட விரோதம் இருந்தால் அதற்கு அனுமதி வழங்கிய பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பெரிய அளவிலான திட்டங்களில் உதவி பொறியாளர் இளநிலை பொறியாளர் செயற்பொறியாளர் மண்டல அலுவலர் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மேலும் விதிகள் மீறிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவை அனைத்தையும் நிறைவேற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சார்ந்த செய்திகள்