

Published on 15/06/2021 | Edited on 15/06/2021
தமிழகத்துக்கு இன்று (15/06/2021) ஒரே நாளில் 6.16 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இதில் 1,19,020 கோவாக்சின், 4,97,640 கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் ஆகும். இதனை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து தமிழகத்துக்கு வரும் நிலையில் இனி தடுப்பூசிக்கு தடுப்பாடு இருக்காது என்று தமிழக சுகாதாரத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.