கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ பாண்டியன், கரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தொகுதியில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்குக் குடும்பத்திற்கு, தலா 5 கிலோ அரிசி மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் மே 14- ஆம் தேதி சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்படை கிராமத்தில் 1,300 குடும்பத்திற்கும், ஆதிவராகநல்லூர் கிராமத்திற்கு 850, பெரிபட்டு 400, சி.கொத்தங்குடி ஊராட்சியில் 2100, சிதம்பரம் நகரம் 300 என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதனைப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் கருணாநிதி, பிச்சாவரம் கூட்டுறவு சங்கத் தலைவர் வேணுகோபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.