கரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்குக்கு முன்பே பள்ளி, கல்லூரிகளுக்கு காலஅளவின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் வீட்டில் உள்ளனர். இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒரு குறும்பட போட்டியினை அறிவித்திருந்தது.
அந்த குறும்பட போட்டியில் பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்துக்கொள்ளலாம், வீட்டில் இருந்தபடியே சிறப்பான முறையில் மொபைல் வழியாக ஒரு குறும்படத்தை தயாரித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்த மொபைல் எண்ணின் வாட்ஸ்அப்புக்கு அனுப்ப வேண்டும், சிறந்த குறும்படம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் அறிவிக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அறிவித்தார்.
அதன்படி, ஏப்ரல் 19ந்தேதி மட்டும் குறுபடங்கள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டதில் மாவட்டம் முழுவதிலும்மிருந்து சுமார் 312 குறும்படங்கள் அனுப்பியிருந்தனர். அதில் சிறந்த குறும்படங்கள் எவை, எவை என தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில், திருவண்ணாமலை நகரில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் ஃபெட்ரீக் லீபன் முதல் பரிசும், அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் பிரபாகரன், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் ஸ்வாதி, 7 ஆம் வகுப்பு படிக்கும் அபிநயா, திருவண்ணாமலை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் அக்ஷயா, போளுர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் கோகுலபிரியா, ஆரணி தி கிரிசர் அகடாமி பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயிலும் தமிரா, செய்யார் அடுத்த போத்தேரிபாலவாக்கம் நலந்தா பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயிலும் விக்னேஷ் முறையே பரிசுகளை பெற்றுள்ளனர். இவர்களுக்கான பரிசுகளை ஏப்ரல் 24ந்தேதி கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.