



Published on 29/05/2021 | Edited on 29/05/2021
கடந்த வாரம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என முதல்வர் தெரிவித்தார். அந்த வகையில் சென்னையில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளின் வருகை குறைந்துள்ளது. எப்போதுமே பரபரப்பாக ஆம்புலன்ஸ்கள் நின்று கொண்டிருக்கும் வளாகத்தில், தற்போது மருத்துவமனை பரபரப்பு குறைந்தே காணப்படுகிறது.