Skip to main content

இவர்களுக்காக சங்கம் வைத்து போராடும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அரசு ஊழியர்கள் தந்த பரிசு...

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

தேர்தல் பணியில் ஈடுபடுவதால் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கொடுக்கப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இதில் தபால் வாக்கு படிவங்கள் வழங்குவதில் அரசு தாமதம் செய்கிறது. இன்னும் ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் அரசு ஊழியர்கள் வாக்கு இந்த ஆட்சியாளர்களுக்கு எதிரானது என்ற கருத்தோட்டம் தான் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோஜியோ குற்றம் சாட்டியதோடு நீதிமன்றத்திலும் முறையிட்டது. 

 

 Communists awarded by government employees...

 

இது ஒருபுறம் இருக்க..., 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் சுமார் இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். சராசரி ஒரு தொகுதிக்கு ஐயாயிரம் பேர் தபால் ஒட்டு போட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் சற்றேறக்குறைய தி.மு.க. கூட்டனிக்கு மூவாயிரம் வாக்குகள் கொடுத்துள்ளார்கள். அடுத்ததாக அ.தி.மு.க. கூட்டணிக்கு 400 முதல் 600 வரை என தபால் ஒட்டு போட்டுள்ளனர் புதிதாக வந்த கட்சிகளான அ.மு.மு.க., நாம் தமிழர், ம. நீ.ம இந்த கட்சிகளுக்கும் நூறு, இருநூறு, முன்னூறு என வாக்குகள் கொடுத்துள்ளனர்.
 

 

மற்ற கட்சிகளை விட இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றிதான். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்கி வருவாய் துறை, காவல் துறையில் உள்ள அமைச்சு பணியாளர்கள் வரை சங்கத்தில் இருப்பது. அரசு ஊழியர்கள் சங்கம், அரசு பணியாளர்கள் என்ற குறிப்பிட்ட இந்த இரண்டு சங்கங்களில் தான் இந்த இரு சங்கங்களும் கம்யூனிஸ்ட்டுகளான CPM மற்றும் CPI யின் தலைமையில் இயங்குபவை. அரசு ஊழியர்களின் பலவகையான பேராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள். 

 

அப்படிப்பட்ட கட்சிக்கு இவர்கள் கொடுத்துள்ள வாக்குகள் தான் அதிர்ச்சியை கொடுத்துள்ளது நாகை, திருப்பூரில் CPI, மதுரை, கோவையில் CPM வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் இந்த தொகுதிகளிலும் மற்ற தொகுதிகளில் செலுத்தியதைப் போல் தான்  தபால் வாக்கு போட்டுள்ளார்கள். இதைவிட கொடுமை இந்த நான்கு தொகுதிகளிலும் செல்லாத ஒட்டுக்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் சராசரி ஐநூறு கொடுத்தவர்கள் அதை விட கொடுமை யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டாவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 70 வது முதல் 100 ஒட்டு வரை போட்டுள்ளார்கள்.
 

 

ஊழியர்களுக்கு உரிமை கொடு, பாதுகாப்பு கொடு, சம்பளத்தை உயர்த்திக் கொடு என யாருக்காக இந்த கம்யூனிஸ்ட்டுகள் போராடினார்களோ அவர்கள் போட்டியிட்ட தொகுதியிலேயே தபால் வாக்கு செலுத்திய அரசு உழியர்கள் சதவீத கணக்குப்படி 20 சதவீதம் பேர்  யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என நோட்டாவை தேர்தெடுத்துள்ளார்கள். தங்களுக்காக தெருவில் இறங்கி போராடுபவனுக்கு அரசு ஊழியர்கள் கொடுத்த பரிசு..

 

 

சார்ந்த செய்திகள்