![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/ymQhButo8_Trz0U4shkHwEMm9cfP9LsA_6UTB45WlXU/1667215240/sites/default/files/inline-images/kl%3B%27_9.jpg)
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிக்கின்றன என்ற புகார் நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இதனைத் தடுத்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது.
மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் விவரங்களைத் தெரிவிக்க இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.