Skip to main content

மருத்துவரை மிரட்டியதாக செய்தியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

கோவைபுதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் கண்ணன் என்பவரை நீங்கள் போலிமருத்துவர் நாங்கள் உங்களை போன்ற பல மருத்துவர்களை சிறையில் அடைத்திருக்கின்றோம். எனவே எங்களுக்கு ரூ10 ஆயிரம் தந்தால் உங்களை காட்டிகொடுக்க மாட்டோம் என காவலர் செய்தி மற்றும் கடிவாளம் என்ற பத்திரிக்கைகளின் நிருபர் விஜயகுமார், மற்றும் சூர்யா மிரட்டியுள்ளதாக தெரிகிறது. 
 

coimbatore incident


இதை சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர் கண்ணன், கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விஜயகுமார் மற்றும் சூர்யாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்