கரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகமாக நடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை எனப் புகழாரம் சூட்டினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. புதுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பான காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்" என்றார்.
புதுக்கோட்டையில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.