Skip to main content

திருச்சியில் பரிதாபம்; 10 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Class 10 student passed away in Trichy

திருச்சி ஜாபர்ஷா தெரு, கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா(14). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு நிமோனியா காய்ச்சல் வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமாகி வந்த பிறகு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று எருக்கன் செடியை சாப்பிட்டுள்ளார். இதனால் கால் வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து ஸ்வேதா ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஸ்வேதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர்கிறதா பழிவாங்கும் படலம்? அடுத்தடுத்து திருச்சியில் நடக்கும் கொலைகள்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Trichy is in a frenzy due to successive incidents

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மறைவிக்கு பிறகு அவரது தம்பி கேபிள் சேகர்பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் போன்ற தொழில்கள் செய்து வந்தார். கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த பரத்குமார். சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரிமயமங்கலம் போலிசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று கரூர் ஜே.எம்.-2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்தமுத்துகுமார்(28), அதே பகுதியை சேர்ந்த சரவணன், அரியமங்கலம் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19),   அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பே சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நிதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில், அவர்கள் 4 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று(30.4.2024) காலை எஸ்ஐடி பகுதியில் உள்ள டீ கடையில் முத்துகுமார் டீ குடித்து கொண்டார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 2 பேர் முத்துகுமாரை வெட்டிக்கொலைசெய்துவிட்டு ஓடிவிட்டனர். சிலம்பரசன் கொலை சம்பவத்திற்கு பழிக்குபழியாக ரவுடி முத்துகுமார், கொலை செய்யபப்டடிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் தஞ்சை மெயின்ரோட் டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.