Skip to main content

சீன அதிபர் வருகை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

இந்திய பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கக் கூடிய நிகழ்வு இரண்டு நாட்கள் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அந்த குறிப்பிட்ட நாட்கள் ஆன 11, 12 ஆகிய தேதிகளில் செய்யப்பட்டு இருக்கக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

விமான நிலையத்தில் இருந்து கிண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வரை செல்லக்கூடிய அந்த வழியில் அமைந்திருக்கக் கூடிய கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொது மக்கள் பயணிக்க கூடிய அந்த வழித்தடங்களில் முக்கியமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழித்தடங்களை அமைத்துக் கொள்ளுமாறும் போக்குவரத்து காவல்துறை ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது.

 

 Chinese Chancellor arrives ... Traffic change in Chennai .. Police announce!

 

சென்னை விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வழியாக பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அங்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சாலை வரக்கூடிய இடம் முழுவதுமே 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களுக்கும் அதி காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணிவரை கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற எந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்திருக்கிறது.

 

mm


அக்டோபர் 11 பெருங்களத்தூரிலிருந்து பகல் 12.30  மணி முதல் 2 மணி வரை மதுரவாயில் வழியே வாகனங்கள் திருப்பி விடப்படும். அக்டோபர் 11ம் 3.30  முதல் 4.30 வரை ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் 100 டி சாலை வழியே திருப்பி விடப்படும். மதியம் 2 மணி முதல் 9 மணி வரை ஈசிஆர் வரும் வாகனங்கள் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி இல்லை.

அக்டோபர்  12ஆம் தேதி காலை ஏழு முப்பது மணி முதல் மதியம் 2 மணிவரை ஓஎம்ஆர் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் பெரும்பாக்கம் திருப்பிவிடப்படும். 

 

சார்ந்த செய்திகள்