மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு சென்றார்.
இரண்டுவது நாளான இன்று சீன அதிபரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்தில் சந்திக்க உள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இரண்டாம் நாளான இன்று ஜின்பிங்கின் அட்டவணை வெளியாகியுள்ளது. 9:05 க்கு காலை ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டிய அதிபர் சற்று தாமதமாக கிளம்பி கோவளம் சென்றடைந்தார். மோடி அவரை வரவேற்று கோவளம் கடற்கரை ஹோட்டலில் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். வர்த்தகம், ராணுவம், எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து மோடியும் ஜின்பிங்கும் ஆலோசிக்க வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது.
இரண்டு நாட்டு தலைவர்களும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோவளத்தில் உள்ள ஓட்டலில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. கண்ணாடி அறையில் இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசித்த நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தினார்கள் இருநாட்டு தலைவர்களும்.
இதனையடுத்து சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது, “நீங்கள் கூறியது போல், நீங்களும் நானும் நண்பர்கள், இருதரப்பு உறவுகள் குறித்த இருதய கலந்துரையாடல்கள் போன்ற நேர்மையான உரையாடல்களில் ஈடுபட்டோம். தமிழகத்தின் விருந்தோம்பலால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நானும் எனது சகாக்களும் அதை மிகவும் வலுவாக உணர்ந்திருக்கிறோம். இது எனக்கும் எங்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்” என கூறினார்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், கோவளம் ஓட்டலில் தமிழத்தின் கைவினைப்பொருட்களை சீன அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி பார்வையிட்டனர். அப்போது தமிழர்களின் திறமையை வெளிப்படுத்தும் காஞ்சிப்பட்டில் ஷி ஜின்பிங் படத்தோடு தயாரான சால்வையை பிரதமர் மோடி - சீன அதிபருக்கு பரிசளித்தார். அதன்பின் ஜின்பிங் மோடி புகைப்படம் பொறித்த தட்டை மோடியிடம் பரிசாக கொடுத்தார்.
இதன்பின்னர் கோவளத்தில் இருந்து நேராக கிளம்பி விமான நிலையத்திற்கு செல்கிறார் ஜின்பிங். அங்கிருந்து நேபாள் செல்கிறார் சீன அதிபர் ஜின்பிங்.