Skip to main content

கருவுற்ற 14 வயது சிறுமி; போக்சோவில் வாலிபர் கைது

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

child girl case youth arrested under pocso

 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியைச் சேர்ந்தவர் நிரள்யா (வயது 14, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அப்பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பர்கூர் அருகே உள்ள முனமடுவு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவா (26). இவரும், அந்தச் சிறுமியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். 

 

சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறிய சிவா, அவருடன் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்துள்ளார் . இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுமியின் உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உறவினர்கள் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் அளித்தனர். மகளின் நிலைமையை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

மகளிடம் விசாரித்தபோது, அவரும் சிவாவும் காதலித்து வந்ததும், அதனால் ஏற்பட்ட நெருக்கத்தில் கர்ப்பமுற்றதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரித்த காவல்துறையினர், சிவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 


சிவாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர்; காத்திருந்து அவமானப்படுத்திய கிராம மக்கள்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 The family was dragged in a procession wearing sandal garlands and Youth arrested in POCSO case

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 18 வயதுக்குட்பட்ட ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அணில் மூக்னாவர் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பைலேஒங்கலா புறநகர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். அதன் பின்னர், அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்த்னார். 4 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு, வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, வாலிபர் கிராமத்திற்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் வாலிபரின் கையை துணியால் கட்டி செருப்பால் அடித்தும், அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்திற்குள் ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். அவர்களோடு, அந்த கிராம மக்களும் உடன் வருகின்றனர். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.