![Chicken biryani those who bring 50 paise](http://image.nakkheeran.in/cdn/farfuture/2vLPHByUpDwedukkdwZDafbMdQQGanyWAUoIliJgx6s/1661597111/sites/default/files/inline-images/1701.jpg)
கரூரில் 50 பைசா கொண்டு வருபவருக்கு சிக்கன் பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடை அறிவிப்பால் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் தனியார் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துவங்கி ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு ஆண்டு விழா கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு உணவகம் சார்பில் வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டது. 50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு விடப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து பிரியாணி உணவகத்திற்கு வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது. வாடிக்கையாளர் கூட்டம் கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவிற்கு அலை மோதிய காரணத்தால், தகவல் அறிந்த பசுபதி பாளையம் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு வந்து உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அனுமதி பெறாமல் இதுபோன்று சலுகைகள் விடக்கூடாது என்று எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.