Skip to main content

'பிரதமரின் முயற்சியால் செஸ் ஒலிம்பியாட்டை தமிழகத்தில் நடத்த முடிந்தது'-அமைச்சர் மெய்யநாதன்  வரவேற்புரை!

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

 'Chess Olympiad was able to be held in Tamil Nadu due to the Prime Minister's efforts' - Minister Meiyanathan's welcome speech!

 

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.

 

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், 'மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தமிழகத்தில் நடத்த முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். 2000 பங்கேற்பாளர்களையும், ரசிகர்களையும் வரவேற்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் 'தம்பி குதிரை' சிலை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Statue of 'Brother Horse' awaiting unveiling

தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை ) முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நாளை மறுதினம் மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் நாளை சென்னை வருகிறார். பின்னர் மாலை 5:45 மணி அளவில் கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த தம்பி குதிரையினுடைய சின்னம் சிலையாக அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நாளை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலை சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்கான சிலை என கீழே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘சிறந்த மனிதர்’ விருது

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Chief Minister M.K.Stalin was awarded the 'Best Man Award'

 

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 44 வது செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் 114 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்திற்குள் 44 வது செஸ் போட்டிகளையும், அதன் தொடக்க மற்றும் நிறைவு விழாவினை சிறப்பாக நடத்திக் காட்டினார். இந்த போட்டியையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் செஸ் ஒலிம்பியாட் தீபம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

ஏற்கனவே உலக அளவில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ள தமிழ்நாட்டில், மேலும் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர்களுடன் விளையாடவும், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்க வருகை தந்த சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு உயர்தர நட்சத்திர விடுதிகள், தங்கும் இடத்திலிருந்து போட்டி நடைபெற்ற இடத்திற்கு சென்று வர சிறப்பு போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி நடைபெற்ற ஏசியன் செஸ் எக்ஸளனஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது (Man of the Year Award) வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இந்த விருதினை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சௌகான் பெற்றுக் கொண்டார். 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியதற்காக முதல்வருக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா,  அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், துணைத் தலைவர் பவேஷ் பட்டேல், செயலாளர் விபினேஷ் பரத்வாஜ், பொருளாளர் நரேஷ் ஷர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.