Skip to main content

காவல்துறை துணை ஆணையர் கோரிக்கையை ஏற்று யூடியூப் சேனல் முடக்கம்..

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

Chennai talks YouTube channel blocked at the request of the Deputy Commissioner of Police.


 

'சென்னை டாக்ஸ்' (Chennai Talks) என்ற யூடியூப் சேனலில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து இந்த வீடியோ தொடர்பாக, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், "பொது இடங்களில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 
 

 

அதன் அடிப்படையில், 'சென்னை டாக்ஸ்' யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் குமார் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் 'பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்', 'பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல்' உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில், சென்னை அடையாறு காவல்துறை துணை ஆணையர் விக்ரமன் அச்சேனலை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று யூடியூப் நிறுவனம், ‘சென்னை டாக்ஸ்’சேனலை முடக்கியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘யூடியூப் சேனல் தொடங்குபவர்கள் கவனத்திற்கு’- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Attention to YouTube channel starters  Tamil Nadu government's important announcement

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி சென்னையில் வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம். சமூக ஊடக சந்தைப்படுத்தல். சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 044-22252081, 22252082 என்ற தொலைபேசி எண்ணிலும் 8668102600, 86681 00181, 7010143022 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் எனவும், பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘நலம் 365’ யூடியூப் சேனலை தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ‘நலம் 365’ எனும் யூடியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சிற்றரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.