Published on 14/04/2020 | Edited on 14/04/2020
சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை உட்பட, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,‘இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழைவதற்குத் தடை தொடர்கிறது. அவசர வழக்குகள் மட்டும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் அனுமதி பெற்று தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.