Skip to main content

"சென்னை, கோவை, மதுரையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு"- தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


சென்னை உள்பட ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. 


இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 26- ஆம் தேதி முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஏப்ரல் 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிமுதல் ஏப்ரல் 29- ஆம் தேதி புதன்கிழமை இரவு 09.00 மணிவரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
 

 

chennai, coimbatore, madurai lockdown tn cm palanisamy


சேலம், திருப்பூர் ஆகிய இரு மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 26- ஆம் தேதி  காலை 06.00 மணி முதல் ஏப்ரல் 28- ஆம் தேதி இரவு 09.00 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். சேலம், கோவை, சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களை தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல்துறை, காவல்துறை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
 

http://onelink.to/nknapp


மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை. மேற்கண்ட பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுயான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.

cm palanisamy


மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் 33% பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி. அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் போன்றவை வழக்கம்போல் செய்ல்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி. தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். 

முழுமையான ஊரடங்கு காலத்தில் நோய்த்தடுப்பு பகுதி கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். நோய்த்தடுப்பு பகுதிகளில் நாள்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். முழுமையான ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rain alert for 10 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், விழுப்புரம், நாமக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story

தமிழக பாஜக தலைவரின் லண்டன் மர்மம் ! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu BJP President to go to London

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது. 

அதேசமயம்,  தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை  வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக தலைவர் சென்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த 500 ஸ்வீட்ஸ்  பாக்ஸ்களை லண்டனில் பயன்படுத்தவும் இந்த படிப்பு பயணத்தில் திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் பரவியுள்ளது.