Skip to main content

கரோனா தடுப்பு - தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

chennai chief secretary discussion with officers coronavirus prevemtion

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்களை தமிழக அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது. 

chennai chief secretary discussion with officers coronavirus prevemtion

 

இந்த நிலையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (22/04/2021) காலை 11.00 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய 11 ஒருங்கிணைப்பு குழுக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்