Skip to main content

காரில் தனியாக இருந்த ஜோடி : கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
police


கோவை அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். 
 

 

 

இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் தனிப்படை போலீஸார் அன்னூர் அவிநாசி ரோட்டில் வாகண சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் ஒரு பெண்ணும் ஆணும் இருந்தனர்.
 

அவர்களை போலீசார் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரனாக பேசினர். இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்றும், உடன் இருந்த பெண் அதே பகுதியை சேர்ந்த அவனது கள்ளகாதலி சுகன்யா என்றும் தெரிய வந்தது.
 

 

 

இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில் பகல் நேரங்களில் கணவன் மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி செல்வதை வாடிக்கையாக கொன்டுள்ளனர். இவர்களிடம் அன்னூர் பகுதியில் திருடப்பட்ட  25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரை பரிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பாராட்டுக்களை தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்