Skip to main content

தலைமை செயலாளர் கிரிஜாவுக்கு ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை!  போராட்டம் தொடரும்!!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
din

 

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.   அதில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடிக்கப்படும் என அதிரடி எச்சரிக்கை விடுத்தார்        அதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோவின் கூட்டமைப்பின் மாநில நிதி காப்பாளர் மோசஸ் திண்டுக்கலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது...... தலைமைச் செயலாளர் இன்றைய தினம் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் ஆசிரியர் அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலைக்கு வரவில்லை என்றால் ஊதியம் பிடிக்கப்படும் என மிரட்டல் துணிவோடு அறிக்கை விட்டுள்ளார் கடந்த இராண்டு காலமாக போராடும்போது எந்த ஒரு அழைப்பு விடுக்காமல் அல்லது அழைத்து பேசாமலும் இந்த தலைமைச் செயலாளர் உடைய இந்த அறிக்கையை வன்மையாக ஜாக்டோ ஜியோவின் மாநில அமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

 

 இப்படிப்பட்ட எச்சரிக்கை அறிக்கை மூலமாக ஜாக்டோ ஜியோ தனது போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி முன்நடத்தி செல்லும் 
எத்தனை  அடக்குமுறைகளை ஏவி விட்டாலும்  ஜாக்டோவில்  இருக்கக்கூடிய 12 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நாளை தினத்திலிருந்து அனைத்து  அலுவலகங்களிலும்  கலெக்டர் அலுவலகம் முதல் தாசில்தார் அலுவலகம் வரையும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆரம்பபள்ளி வரை இருக்கக்கூடிய அனைவரும் வேலையை மூடி விட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் உறுதி என இந்த நேரத்தில்  தலைமைச் செயலாளருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்
 

 

சார்ந்த செய்திகள்