Skip to main content

சென்னையில் குப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்குத்தீனி!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

சென்னையில் அம்பத்தூர் அருகே நொளம்பூரில் சாலையோர குப்பைக் கிடங்கில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் பட்டப்பகலில் 3 டன் எடை கொண்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன.

c

 

6 மாதங்கள் மட்டுமே உண்பதற்குத் தகுதியானவை என்று பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட நிலையில், அவற்றை ஒரு வருடத்திற்கும் மேலாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அட்டைப் பெட்டிகளுடன் கொண்டு குப்பையில் கொட்டி இருப்பதால், தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து விற்பனைக்கு செல்லாமல் தேங்கிய சரக்குகளாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

உதாரணத்திற்கு கடந்த ஆண்டு 6-வது மாதத்தில் அடைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் அதிகளவில் கிடந்தது. அவை அனைத்தும் காலாவதியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினரின் கெடுபிடி தற்போது அதிகரித்து வருவதால், காலாவதியான பொருட்களைக் குப்பையில் கொட்டி வருவதாக கூறப்படுகிறது.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த நொளம்பூர் காவல்துறையினர், காலாவதியான உணவு பாக்கெட்டுகளைத் தீயிட்டு அழித்தனர். சமூக விரோதிகள் எடுத்துச்சென்று காலாவதி தேதியை அழித்து கடைகளில் விற்றுவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சார்ந்த செய்திகள்