Published on 15/11/2018 | Edited on 15/11/2018

இன்று கஜா புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல மாவட்டங்களில் மிதமானது முதல் மித அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் மழை பெய்தது. அதன்பின் தற்போது சென்னையில் அடையாறு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.