கடந்த ஒரு வார காலமாக வட மாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கமாக தமிழக பகுதிகளில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகப் பகுதிகளின் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, கோவை, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.