Published on 27/05/2022 | Edited on 27/05/2022
![cauvery water arrived mukkombu](http://image.nakkheeran.in/cdn/farfuture/GC9XOJFFsa10GUUC7ESr0MCMV0r-XywFqdFsQCherao/1653637102/sites/default/files/inline-images/714_2.jpg)
டெல்டா மாவட்ட குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையை கடந்த 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை வரலாற்றில் ஜூன் 12- ஆம் தேதிக்கு முன்பே 11- வது முறையாக அணை திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு வழியாக இன்று(27.5.2022) காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. இதனை அப்பகுதி மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து விதை நெல், மலா்கள் தூவி வரவேற்றனர்.