Published on 04/09/2020 | Edited on 04/09/2020

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தால் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்துகோரியும், அரியர்ஸ் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.