தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியதற்கு ஸ்டெர்லைட்டை பூட்டியிருக்கலாம் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
இன்று சென்னை பாண்டிபஜாரில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான்.
தமிழ்நாடே பிரச்சனையில் உள்ளது. பிரச்சனையின் மொத்த உருவம் தமிழ்நாடு. இப்பொழுது 7 பேர் விடுதலை பற்றி பேசுவதை விட்டுவிட்டு மற்ற எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியதற்கு எல்லோரும் சேர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பூட்டியிருந்தால் நான் பாராட்டி இருப்பேன். நான் ஒரு 10000 பேரை திரட்டி நாம் தமிழருடன் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டுவோம். இதற்கெல்லாம் காரணம் டிக்கெட் விலை 2 ஆயிரம் 3 ஆயிரம் என விற்பதுதான். அது மாபெரும் துரோகம். ஒரு நடிகன் என்பவன் தனது ரசிகனை குறைந்தபட்ச விலையில் தனது படத்தை பார்க்கவைக்க வேண்டும். அவன்தான் நடிகன். ரசிகனை மேலும் மேலும் ஏழைகளாக்கி பார்ப்பது கட்டணத்தை உயர்த்துவது பாலியல் தொழில் செய்வதற்கு சமம்.அதேபோல் இன்டர்நெட்டில் படம் பார்க்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனக்கூறினார்.