Skip to main content

ஒரே ஆள் ஆனால் பலபெயர்... திருமண தகவல் இணையத்தில் பெண் மருத்துவர்களை குறிவைத்து மோசடி!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

திருச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கணவனை இழந்து குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் மைய இணையதளங்களிலும் விண்ணப்பித்திருந்தார் அந்தப் பெண் மருத்துவர். அப்போது ஒரு இணையதளத்தில் விது என்ற நபரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில் கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் மருத்துவர்களுக்கு வாழ்வு கொடுக்க தயார் என அந்த இணையத்தில் விது பதிவிட்டுருக்கவே அந்தப் பெண் மருத்துவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேச தொடங்கவே இருவருக்கும் காதல் மலர்ந்தது.

 

internet

 

திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணுடன் விது நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏமாற்றிக் கொண்டு இருந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு அந்த பெண் மருத்துவர் சென்றபோது அவனைப் பற்றி தகவல்கள் தெரியவந்தது.

 

police

 

அந்த வீட்டில் அவனுக்கு வந்திருந்த கொரியர்  ஒன்றை பிரித்துப் பார்க்கவே அதில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரின் கடிதம் இருந்தது. அது யாரென்று கேட்க சகோதரி என்று கூறி அவன் சமாளித்துள்ளான்.  இருப்பினும் அனுப்புனர் விவரத்திலிருந்து செல்போன் எண்ணுக்கு அந்த பெண் மருத்துவர் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது அப்போது எதிர்முனையில் பேசிய பெண் தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்டு பேச தொடங்கியுள்ளார். அமெரிக்க மருத்துவரை மணந்துகொள்ள போவதாகவும் கூறவே திருச்சி பெண் மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.

 

 

police

 

அதன்பின்தான் விது பல்வேறு திருமண தகவல் மைய இணைய தளங்களில் வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு பல பெண் டாக்டர்களை ஏமாற்றி பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெரியாமல் 18 லட்சம் வரை அவனிடம் கொடுத்து ஏமாந்த அந்த பெண் மருத்துவர் லால்குடி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

விசாரணையில் அவன் திருவண்ணாமலை மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடப் பொறியாளர் ஆக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை கைது செய்வதில் தாமதம் ஏற்படவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

 

police

 

police

 

சக்கரவர்த்தி கைது செய்யப்படாவிட்டால் திருச்சி எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிக்கவே உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான் மிது.  விஜயகுமார், விது, சரவணன் ஆகிய பல பெயர்களில் அவன் திருமணத் தகவல் இணையதளங்களில் பதிவிட்டு ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

சக்கரவர்த்தி மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனது கார் ஓட்டுனர் முருகன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நான் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை எல்லோருமே என்னை தேடி வந்தார்கள் அவர்களே  ஏமார்ந்தார்கள் என அவன் தெரிவித்துள்ளான் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்