Skip to main content

இரட்டை இலைக்கு லஞ்சம்; வழக்கை விசாரிப்பதற்கான தடை நீட்டிப்பு

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 

 

 Bribe to double leaf; The extension of the ban to investigate the case

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீதான புகாரிலான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

 

இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்து டெல்லி காவல்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் பெற்று வெளியே வந்தார் டிடிவி. அந்த வழக்கில் டெல்லி காவல்துறை தினகரன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

 

 Bribe to double leaf; The extension of the ban to investigate the case

 

அதனையடுத்து இந்த வழக்கில் மனுதாக்கல் செய்யப்பட்டு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை பெற்றிருந்தனர். இந்நிலையில் டிடிவி தினகரன் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையை நீடிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில்  புதியதாக மனுதாக்கல் செய்திருந்தார்.

 

இன்று நடந்த அந்த மனுமீதான விசாரணையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்