தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் நடிகை மீரா மிதுன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். மாடல் அழகியான மீராமிதுன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டத்தை வென்றிருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆனால், பட்டத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு மோசடி செய்ததால் இவரிடமிருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜோ ,மைக்கேல் என்பவர் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக பேசப்பட்டு வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் இவர் மேலும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
Really a mudhalvan, indian moment @shankarshanmugh ?✨ pic.twitter.com/NL77ZMmGDK
— Meera Mitun (@meera_mitun) November 14, 2019
மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மீராமிதுணுக்கு தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிக்கை மற்றும் அடையாள அட்டையையும் சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டுள்ளார். அதில், "பெரும்பாலான பேரரசுகள் மற்றும் நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் ஊழல் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை, இந்த தலைவர்கள் தங்கள் சொந்த இனத்தை வென்றெடுக்கும் வரை அவர்களுக்கு விருப்பமான ஒரு தலைவருக்கு வாக்களிப்பதில் அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை முழக்கமிட்டு நான் நீண்ட காலம் வாழ்ந்தேன். ஆனால் இங்கே அனைவரையும் திருப்பிக் கொண்டு வருகிறேன், இப்போது ஊழல் தடுப்பு ஆணையத்தில் (ஏ.சி.சி) சென்னை தமிழ்நாடு மாநில இயக்குநராக உள்ளேன், இனிமேல் யாரும் மறைக்க முடியாது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது என்று கூறி, ஊழல் இல்லாத அரசுக்கு என்னுடன் கைகோருங்கள் என்று கூறியுள்ளார்.