![Bharathiraja flexible after watching 'Mamanithan' movie!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zt5PuHNMwIrduEyAwfqfjrq69T8U8uXvq1QzJ3lBAwg/1656230945/sites/default/files/inline-images/seenu4434.jpg)
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
![Bharathiraja flexible after watching 'Mamanithan' movie!](http://image.nakkheeran.in/cdn/farfuture/wnT78Vlu3wGYjQw-8MhQQzEC1PJll1JmXikdXUuGSeE/1656230958/sites/default/files/inline-images/seenu4343.jpg)
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் கடந்த ஜூன் 24- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
![Bharathiraja flexible after watching 'Mamanithan' movie!](http://image.nakkheeran.in/cdn/farfuture/whoylWvlkOzhzVM3nuJdfaFZhiEO1KhUbLQSSsTXiFE/1656230966/sites/default/files/inline-images/seenu434333.jpg)
திரைப்பட இயக்குநர்கள், திரைப்பிரபலங்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள் உள்ளிட்டோர் இந்த படத்தைப் பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்த்த இயக்குநர் சங்கர், மாமனிதன் குறித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, 'மாமனிதன்' திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமியை நேரில் அழைத்து பொன்னாடைப் போர்த்தி பாராட்டியதுடன், அவர் என் மகன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.