திமுக முதன்மைச் செயலாளர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.