Skip to main content

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!   

Published on 27/02/2022 | Edited on 27/02/2022

 

WEATHER

 

வங்கக்கடலில் அடுத்த  48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

வரும் மார்ச் 2 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழை பொழியும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதேபோல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது  தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்