Skip to main content

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா

Published on 07/01/2019 | Edited on 07/01/2019
r

 

தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அமைச்சரின்  ராஜினாமா கடிதம் முதல்வரின் வாயிலாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை    அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


1998ல் கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து 1998ல் போராட்டம் நடைபெற்றது.    இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக  தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.   எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.

 

r

 

போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.   குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டதில்    மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு தண்டனை தரப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.  மேலும்,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி  இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும்.  மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதி விதி.    மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை  நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மனு தாக்கல் செய்ததால்,  அவர் மேல்முறையீடு செய்வதற்காக  அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

 

இந்நிலையில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து,  தனது ராஜினாமா கடிதத்தை ஆளுருக்கு அனுப்பி வைத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்