வேலூர் மாவட்டத்தில் 4வது துணை கண்காணிப்பு அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத் தொடரில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தை 2 ஆக பிரித்து அணைக்கட்டிற்கு தனியாக துணை கண்காணிப்பு அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் இதனால் அதிக தூரத்தில் இருந்து வரும் புகார்தாரர்கள் அலைச்சலை குறைக்கவும் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும் எனக் கோரிக்கை எழுந்தது.
இதன் அடிப்படையில் கடந்த ஓர் ஆண்டுகளாக திட்டமிட்டு இன்று அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் துணை காவல் கண்காணிப்பா அலுவலத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. எஸ் பி மதிவாணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதன்மூலம் இன்று முதலே கட்டுப்பாட்டாரை செயல்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “காவிரி அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆதனூர், குமாரபாளையம், புங்கனூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு . இதற்கு பதில் அளித்த அமைச்சர் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாமல் பேசி இருக்கிறார். அதை அவர்கள் துவங்கப்பட்டது தான் ஆனால் சரியாக ஆய்வு நடத்தாமல் துவங்கிய காரணத்தால் முதன்முதலில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இன்று பாதி தொகைக்கு வருவது போல் செய்துவிட்டுப் போய்விட்டார். ஆகவே இடத்தை நியமிப்பதில் கூட தவறு செய்து இருக்கின்றார்கள். இதைப் பற்றி சட்டமன்றத்தில் பேசட்டும் அதற்கு சரியான பதில் நான் அளிக்கிறேன்”என்றார்.
இதையடுத்து, மேட்டூர் அணையை தூர்வார திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அணைக்கட்டுகளை எங்கும் தூர்வார முடியாது எந்த நாட்டில் தூர்வாரி இருக்கிறார்கள் மேட்டூர் அணையோ அல்லது வேறு எந்த அணையா இருந்தாலும் அணைக்க கீழே மணல் வருவதற்கு சரியான இடம் உண்டு அதில் மணல் அடித்து வரும் அது ஆற்றில் சேரும் ஆற்று மணல் தான் எடுத்து வருகிறோம் அணையை யாரும் தூர்வார மாட்டார்கள்” என பதிலளித்தார்.