கடந்த ஜூலை 23- ஆம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தேர்தலை மீண்டும் நடத்தவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை சிறப்பு அதிகாரி கீதாவே தொடர்ந்து நிர்வாகத்தை கவனிக்கலாம் என்றும் என்றும், புதிய நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் ரத்து செய்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சங்கரதாஸ் அணியின் ஐசரி கணேஷ், நடிகர் சங்க தேர்தல் வழக்கின் தீர்ப்பு மூலம் நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது. நேர்மைக்கு கிடைத்த வெற்றி; மறுத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.