Published on 17/04/2019 | Edited on 17/04/2019
நகைச்சுவை நடிகர் ‘தாடி’பாலாஜியின் மனைவி நித்யா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நித்யா , புதிதாக தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சி’யில் இணைந்தார். இதையடுத்து அவர் அக்கட்சியின் தமிழ்நாட்டு தலைவராக அறிவிக்கப்பட்டார்.

நடைபெறும் மக்களவை தேர்தலில் அவர் டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலாக வசிப்பதால் தனக்கு அவர்களின் ஆதரவு இருக்கும் என்று நம்பி போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் தனித்தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்ததாகவும், தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் பாலாஜி அங்கே வந்து தன் மீது அவதூறு பிரச்சாரம் செய்வார் என்று பயந்ததால் கட்சி தலைமையின் ஆலோசனைப்படி டெல்லியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.