ஒரு மனிதன் தனது இறப்புக்கு என்ன காரணம் என்று கூறுவான் ஒன்று குடும்ப பிரச்சனை மற்றொன்று கடன் பிரச்சனை அடுத்து அவனைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது இறப்புக்கு காரணம் என்று கூறுவது மிகவும் அரிதான செய்தி. ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் ஒருவர் நேற்று இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது இறப்புக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என கூறியிருக்கிறார்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கனகராஜ் இவருக்கும் வயது 42. விசைத்தறி உரிமையாளர். தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சென்ற சில நாட்களாக கனகராஜ் மனவேதனையுடனே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கனகராஜ் ஈரோடு அருகே ரங்கம்பாளையத்துக்கு தனது பைக்கில் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கனகராஜ் நேராக சென்று அங்குள்ள கிணற்றில் குதித்தார். அவர் கிணற்றில் குதித்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் யாரும் கேட்பாரற்று நின்றிருந்த பைக்கை பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, அந்த கனகராஜ் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுசம்பந்தமாக ஈரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் மிதந்த கனகராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கனகராஜூக்கு வனிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
கனராஜ் தற்கொலை குறித்து போலீசாரின் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். இதில், கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம் அவரது மணி பர்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அந்த கடிதம் இருந்துள்ளது. கனகராஜ் தற்கொலை செய்து கொண்டதும் அந்த மணிப் பர்சில் கனகராஜ் கடைசியாக எழுதி வைத்த கடிதத்தில் இருப்பது "என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னுடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என கனகராஜ் தனது கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
ஜவுளி தொழிவில் நசிவு ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம் மத்திய அரசின் புதிய ஜவுளி கொள்கையே காரணமாக இருக்கிறது. இந்த இறப்பிற்கு காரணம் யார்? மத்திய, மாநில அரசுகளே காரணமாக அமைத்துள்ளது.