Published on 28/04/2018 | Edited on 29/04/2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்தார் அய்யாக்கண்ணு. மெரினாவில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்த அய்யாக்கண்ணுவிற்கு தனி நீதிபதி ராஜா அனுமதி அளித்து இருந்தார். மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் ஆகியோர் அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அனுமதித்து பிற்பகலில் வெளியான உத்தரவுக்கு அடுத்த சில மணி நேரங்களில் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.