சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் மருந்தாக்கியல் துறை மாணவர்கள்,கடலூர் மாவட்டம் சிதம்பரம் மருந்து வணிகர்கள்,சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும், விதமாக 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பேரணியாக கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு வீதிகளிலும் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய பாதகைகளுடன் வந்தனர். பேரணியில் டெங்கு விழிப்புணர்வு, உறுப்பு தான விழிப்புணர்வு, மழைநீர் சேமிப்பு போன்ற விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பேரணியை அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் கிருஷ்ணமோகன், சிதம்பரம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக பொறியியல் துறை முதல்வர் ரகுகாந்தன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தனர். இதில் மருந்தாக்கியல் துறை சார்ந்த மருத்துவர் மன்னா , தனபால், மது சுதன், தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க செயலாளர் வெங்கட சுந்தரம், கடலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கதிர்வேல், மொத்த மருந்து விற்பனை பிரிவு தலைவர் பிரகாஷ். சிதம்பரம் மருந்து வணிகர் சங்க தலைவர் கலியபெருமாள் மற்றும் ரோட்டரி மிட்டவுன் சங்க தலைவர் டாக்டர். கோவிந்தராஜன், செயலாளர் பிரகதீஸ்வரன், பொருளாளர் அருள்குமார், மூத்த உறுப்பினர் ஷண்முக விலாஸ் கணேஷ், மற்றும் சங்க உறுப்பினர்கள் சிதம்பரம் வர்த்தக சங்கம் சார்பாக சிவராமவீரப்பன் மற்றும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.