ஓலா மற்றும் ரேபிடோ ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் வரும் போது அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரேபிடோ ஓட்டுநர் சஞ்சய் என்பவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாடிக்கையாளருக்காக காத்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்பவர், நீங்கள் இங்கே வரக்கூடாது என கற்களால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதேபோல் நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் தங்களது வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர் பாதிக்கப்பட்ட ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள்.